Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தோல்வியை தழுவிய பேச்சுவார்த்தை… குழம்பி நிற்கும் மத்திய அரசு…!!!

டெல்லியில் விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை இன்று தோல்வியடைந்துள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதிலும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து தங்கள் ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையில் எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்படாத நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மேலும் உச்சநீதிமன்றம் அமைத்த குழுவை ஏற்க மாட்டோம். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |