Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நடிகர் ஜெய்யுடன் இணைந்த சுந்தர்.சி… வெளியான புதிய தகவல்…!!!

மீண்டும் நடிகர் ஜெய்யுடன் சுந்தர்.சி இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் 1995-ஆம் ஆண்டு வெளியான முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி . இதையடுத்து இவர் பல சூப்பர் ஹிட் கமர்ஷியல் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். சுந்தர்.சி படங்களை இயக்குவது மட்டுமல்லாது படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை இவர் தயாரிப்பில் வெளியான ஹலோ நான் பேய் பேசுறேன், மீசைய முறுக்கு, முத்தின கத்திரிக்காய், நான் சிரித்தாள் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மீண்டும் இணையும் சுந்தர்.சி - ஜெய் கூட்டணி? | sundarc - jai in new film -  hindutamil.in

மேலும் இவர் தயாரிப்பில் உருவான நாங்க ரொம்ப பிசி திரைப்படம் நேரடியாக டிவியில் ரிலீசானது. இந்த படத்தை சுந்தர்.சி யின் உதவி இயக்குனர் பத்ரி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுந்தர்.சி அடுத்ததாக தயாரிக்கும் படத்தை இயக்குனர் பத்ரி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் சுந்தர்.சி நடிகர் ஜெய்யுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கலகலப்பு-2 படத்தில் சுந்தர்.சி, ஜெய் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |