Categories
மாநில செய்திகள்

“மீண்டும் பயன்படுத்தக்கூடாது” மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி….. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…..!!!!

தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்நிலையில் அரசு பள்ளிகளில் சிற்றுண்டி தயாரிப்பதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தயார் செய்யப்பட்ட உணவை குழந்தைகளுக்கு வழங்கும்முன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அதை சாப்பிட்டு பார்க்க வேண்டும். மசாலா பொருட்கள் தரமாக இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. மூலப்பொருட்கள் இயல்பான மணம், நிறம் உடையதாகவும், வெளிப்பொருட்கள் கலக்காமலும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |