இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா தொற்று பரவலால் முழு ஊரடங்கு போடப்பட்டது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
ஆனால் 1- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. மேலும் அனைத்து ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்தது. இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 11 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து 11 மாணவர்களையும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். எனவே அடுத்த உத்தரவு வரும் வரை பள்ளி மூடப்படுகின்றன என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.