Categories
உலக செய்திகள்

மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்…. அரசின் தீவிர நடவடிக்கை…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சிங்கப்பூரில் டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு கொசுக்களின் உற்பத்தியை ஆய்வகத்தில் விரைவுப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. 

சிங்கப்பூர் நாட்டில் நடப்பு ஆண்டில் 1,400 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து காணப்படும். இந்த சூழ்நிலையில் டெங்கு பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய கொசுக்களை அழிக்க ஒல்பேச்சியா என்ற திட்டம் ஒன்றை விரைவுப்படுத்த சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி அந்நாட்டு சுற்றுச்சூழல் மந்திரி கிரேஸ் ஃபூ கூறியதாவது, “ஆரம்பத்தில் ஒவ்வொரு வாரமும் 20 லட்சம் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன்பின், வாரத்திற்கு 50 லட்சம் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என கூறினார்.

இந்த  கொசுக்களில் ஒல்பேச்சியா என்ற பாக்டீரியா காணப்படும். இந்த பாக்டீரியாவை சுமந்து கொண்டு செல்லும் கொசுக்கள் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும்போது, அவற்றின் முட்டைகள் குஞ்சு பொறிக்காது. இதனால், கொசுக்களும் உற்பத்தியாகாது. டெங்குவை கட்டுப்படுத்தும் வகையில், இயற்கையாக உருவான கொசுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இந்த சிறப்பு கொசுக்கள் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |