Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கலாம்…. மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயிர்களை தீயிட்டுக் கொளுத்தியதாலும், தொழிற்சாலையில் இருந்து புகை வெளியேறியதாலும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டு வருகிறது. இதன் காரணமாக வரும் திங்கள் முதல் பள்ளி கல்லூரிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரடி வகுப்பில் அச்சமின்றி கலந்து கொள்ளலாம் என்று பேசியுள்ளார். டெல்லியில் காற்று மாசு காரணமாக கடந்த 10 நாட்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |