பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து எந்த பரிசீலனையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனால் அம்மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய உதவித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் பிரதீப் யாதவ் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த திட்டம் அரசிடம் உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இது தொடர்பாக தற்போதைக்கு எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என கூறியுள்ளார்.
ஜார்கண்ட் மாநில பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு அதாவது கடந்த 24ஆம் தேதி அரசு ஊழியர்கள், முதலமைச்சர்கள், ஹேமந்த் சோரன் சங்கத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அது தொடர்பாக எந்த திட்டமும் பரிசுகள் இல்லை என முதலமைச்சர் தெரிவித்திருப்பது அரசு ஊழியர்களுக்கு இடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.