இன்று முதல் தேசிய தலைநகரில் பழைய கலால் கொள்கை மீண்டும் அமலுக்கு வந்திருக்கின்றது. இதனால் தனியார் விற்பனையாளர்கள் மதுபான கடைகள் நேற்றுடன் மூடப்பட்டுள்ளது. இனி டெல்லி அரசாங்கமே மது விற்பனையை மேற்கொள்ளும் மேலும் தனியார் மது விற்பனை கடைகள் அரசு மது விற்பனை நிலையங்களால் மாற்றம் செய்யப்படும். இந்த நிலையில் தற்போது டெல்லி நகரில் 300 மதுபான கடைகள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது. இந்த கடைகளில் சுமார் 240 மதுக்கடைகள் முதல் நாளில் திறக்கப்படும் என வர்த்தக நிபுணர்கள் தெரிவித்து இருக்கின்றனர். கலால் துறை நிர்வாகம் இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களின் 130 பிராண்டுகள் மற்றும் 230 வெளிநாட்டு பிராண்டுகளை மட்டுமே பதிவு செய்திருக்கிறது.
இந்த நிலையில் செப்டம்பரில் ஒரு நாளைக்கு சுமார் 12 லட்சம் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படலாம் என கலால் துறை மதிப்பீட்டு இருக்கிறது. அதனால் 40 லட்சத்திற்கும் அதிகமான மதுபான்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் மதுபானங்களுக்கான தேவை தினந்தோறும் 1.5 மில்லியன் பாட்டில்களை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழைய கலால் கொள்கை 17 நவம்பர் 2021 வரை நடைமுறையில் இருந்தது. அதன் பின் அது புதிய கொள்கையால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பழைய கொள்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதன் மூலமாக தனியார் ஒப்பந்தங்களுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்குகள் இனி கிடைக்காது. மேலும் புதிய கலால் கொள்கையின்படி டெல்லியில் சுமார் 468 மதுபான கடைகள் இயங்கிக் கொண்டிருந்தது.
புதிய கலால் கொள்கை ஏப்ரல் 30ஆம் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய கலால் கொள்கை திரும்ப பெறப்பட்டிருப்பதால் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப்பின் சில்லறை மது விற்பனையில் தனியார் உரிமைத்தார்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். டெல்லி அரசு ஜூலை மாதம் புதிய கலர் கொள்கையை திரும்ப பெற முடிவு செய்து அரசு நடத்தும் கடைகள் மூலமாக மதுபானங்களை விற்பனை செய்ய உத்தரவிட்டிருக்கிறது. மேலும் இந்த முடிவை ஆளுநர் வி கே புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த முறைகேடுகள் பற்றி மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு கச்சேனாவுக்கு பரிந்துரைத்ததை அடுத்து டெல்லி அரசு புதிய கலால் கொள்கை கைவிட்டு பழைய கலால் கொள்கையை மீண்டும் டெலியில் செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் டெல்லி தலைமை செயலாளரின் அறிக்கையின் அடிப்படையில் 2021 – 22 கலால் கொள்கையை அமல்படுத்தியதில் விதிமீறல்கள் மற்றும் நடைமுறை குறைபாடுகள் பற்றி சிபிஐ விசாரணைக்கு லெப்டினன்ட் கவர்னர் கச்சேனா பரிந்துரை செய்துள்ளார்.