பிரேசிலை சேர்ந்தவர் பிரபல அழகியான ஜெனிஃபர் பாம்ப்லோனா(29). இவர் கிம் கர்தாஷியன் போல தனது தோற்றத்தை மாற்றிக் கொள்வதற்காக தனது 17 வயது முதல் இருந்து உருவமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதுவரை 40 அறுவை சிகிச்சைகளை செய்வதற்காக ஜெனிபர் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கின்றார். கிம் கர்தாஷியன் போல உருவ மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு இவரை கிம் கர்தாஷியன் என்றே மக்கள் அழைக்க தொடங்கியுள்ளனர்.
ஆனால் தன்னை கிம் கர்தாஷியன் என மக்கள் அழைப்பதை விரும்பாத கிம் கர்தாஷியன் தற்போது தன்னுடைய பழைய தோற்றத்தை பெறுவதற்காக முடிவு செய்துள்ளார். அறுவை சிகிச்சை மூலம் தனது பழைய தோற்றத்தை பெற இஸ்தாபுல்லில் உள்ள மருத்துவரிடம் சிகிச்சை பெறுகின்றார் ஜெனிபர். இந்த நிலையில் அந்த மருத்துவ கட்டணத்திற்காக ரூபாய் 95 லட்சம் கட்டணம் செலுத்தியுள்ளாராம். இது பற்றி பேசி உள்ள ஜெனிபர் உருவமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வது என்பது தனக்கு ஒரு போதை என்றும் அப்படி செய்து கொண்டும் தனக்கு திருப்தி அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அடிக்கடி உருவமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் அவரது முகமே விகாரமாக மாறி இருக்கிறது.