Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மீண்டும்” பழைய நிலைக்கு திரும்பிய கடல்…. செத்து மிதந்த மீன் குஞ்சுகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் கடல் அலைகள் நேற்று முன்தினம் பச்சை நிறத்தில் காணப்பட்டதோடு துர்நாற்றம் வீசியது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கடல் நீரின் நிறம் மாறியதற்கு பூங்கோரை பாசிகள் தான் காரணமா? அல்லது ரசாயன கழிவுகள் காரணமா? என மீன்வளத்துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது.

ஆனால் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய மீனவர்கள் மீன் குஞ்சுகள் கடலில் செத்து மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது, கடலின் நீரோட்டத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவதால் சில நேரங்களில் மீன் குஞ்சுகள் செத்து மிதப்பது வழக்கம் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |