அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று மதுமிதா வெளியேற்றப்பட்டார். மேலும் கடந்த சீசன்களை விட இந்த சீசன் சற்று சுவாரஸ்யம் குறைவாக இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸிலிருந்து இரண்டாவது வாரம் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சுவாரஸ்யம் குறைவாக இருப்பதால் கன்டென்டிற்காக அவரை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.