Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் உதயநிதி…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!!!!!

மாமன்னன் படத்தை தொடர்ந்து தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகில் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கலகத் தலைவன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க இருக்கின்றார். இந்த சூழலில் உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கின்றார்.

அதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பை நேற்று சென்னையில் நடைபெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸின் 15 வது வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழாவில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இது பற்றி உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் 15 வருட ரெட் ஜெயண்ட்  மூவிஸின் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன்பாங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்துள்ளோம். மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகவும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |