Categories
தேசிய செய்திகள்

மீண்டும் புத்துயிர் பெறும் கிச்சன் கார்டன் திட்டம்…. குஷியான அரசுப் பள்ளி மாணவர்கள்…!!!!

அரசு பள்ளிகளில் நடைமுறையில் இருந்த கிச்சன் கார்டன் திட்டம் மீண்டும் புத்துயிர் பெரும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் கிச்சன் கார்டன் என்ற பெயரில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது பள்ளிகளிலேயே தோட்டங்கள் அமைத்து அதில் தங்களுக்கு தேவையான உணவை மாணவர்களே பராமரித்து அதில் கிடைக்கக்கூடிய விலை பொருட்களை கொண்டு பள்ளிகளில் மதிய உணவு சமைக்க பயன்படுத்திக் கொள்வதே இத்திட்டம் ஆகும். மாணவர்களிடம் இயற்கையின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டம் குறித்து ஆசிரியர் கூறுகையில் “கொரோனாவிற்கு முன் கிச்சன் கார்டன் திட்டம் மூலம் தினசரி 5 கிலோ காய்கறிகளை விளைவித்து வந்தோம். இதனை முழுவதும் எமது பள்ளி மாணவர்களை கவனித்துவந்தனர். பள்ளிகள் மூடப் பட்டதால் ஸ்வீட் உருளைக்கிழங்கு மட்டுமே வளர்க்க முடிவு செய்தோம். தற்போது மீண்டும் இத்திட்டம் புத்துயிர் பெறும் என நம்புகிறோம்.” என்றார்.

மற்றொரு பள்ளி ஆசிரியரான ரூபா குமாரி கூறுகையில்,” கடந்த ஆண்டு விளைவிக்கப்பட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு சென்றோம். இதன் மூலம் கிடைத்த வருவாயை பள்ளியின் வளர்ச்சி பணிக்கு செயல் படுத்திக் கொண்டோம். மீண்டும் கிச்சன் கார்டன் திட்டத்தை மீட்டெடுக்கும் செயல்பாடுகளையும் முடுக்கிவிட்டுள்ளோம். என்று கூறினார்” இந்த தகவல் பள்ளி மாணவர்களிடம் ஆனந்தத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |