உக்ரைனில் இருந்து வெளியேறி வரும் அகதிகளுக்கு ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
உக்கிரன் மீது 4 வது நாளாக ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்து சேதத்தை ஏற்படுத்தி வரும் ரஷ்யா தற்போது உக்ரைனுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்துள்ளது. வீதியில்இரு இராணுவத்திற்கும் இடையே போர் முற்றியதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போர் நடைபெற்று வரும் இந்த சூழலில் உக்ரைனில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
இவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூசேவா நகரில் வசிக்கும் தொழிலதிபர் தனக்கு சொந்தமான ஹோட்டலில் உள்ள பெரிய அறையில் அகதிகள் தங்கும் இடமாக மாற்றி அவர்களுக்கு, தேவையான உணவுகளையும் இலவசமாக வழங்கிவருகிறார்.
அதேபோல் போலந்தில் தென் கிழக்கு நகரமான ப்ரெசிமைல்ஸ்சில் உக்ரைன் எல்லையை கடந்து வரும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு உள்ளூர் வாசிகள் மற்றும் தன்னார்வலர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அவர்கள் அகதிகளுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், சாக்லேட் ,பழங்கள் போன்றவற்றை வழங்கி வருகின்றனர். ஆனால் உக்ரேனில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதில்லை.