மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு மாதமும் மாத இறுதியில் அனைத்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதில், ஏற்கனவே இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கக் கூடிய நிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. அது தற்போது உருமாறிய கொரோனாவால் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது என்பதால், அதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரி உடன் முதலமைச்சர் ஆலோசிப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
அனைத்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகின்றார். 12.30 மணிக்கு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு தமிழக அரசு தன்னுடைய அறிவிப்புகளை இன்று அல்லது நாளை வெளியாகும் என தெரிகின்றது.