பிளாஸ்டிக் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக மீண்டும் மஞ்சள் பை எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்க தமிழ்நாடு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் மஞ்சள் பை எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்படும் என சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இந்த மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தார்.
அதில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முதல்வர் தொடங்கி வைத்த மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை வலுப்படுத்துவதற்காக மஞ்சள் பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி திட்டம் செயல்படுத்தப்படும். இந்த எக்ஸ்பிரஸ் ரயில் நடமாடும் கண்காட்சி மாணவர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் . பள்ளி, கல்லூரி ,வணிக நிறுவனங்களுக்கு மஞ்சள் பை விருதுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.