Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் மதுவிலக்கை கையில் எடுக்கும் அன்புமணி…. தமிழக அரசுக்கு வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், குடிகளை கெடுக்கும் குடி சட்டம் ஒழுங்கையும், அமைதியையும் சிதைக்க தொடங்கி இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. தமிழகத்தில் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மயிலாடுதுறையில் மது விற்பனை மோதலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது. தமிழகத்தில் மது காரணமாக ஏற்படும் தீமைகள் மற்றும் சீரழிவுகள் குறித்து யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. தமிழகத்தில் மது பழக்கத்தால் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |