இங்கிலாந்து இளவரசர் பிலிப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான 99 வயதான பிலிப் கடந்த 17 ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் . தற்போது அவர் மீண்டும் இதய பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனையில் வெளியான அறிக்கையில் அவர் இவ்வாறு இறுதிவரை மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.