டான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி உள்ளது. இத்திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படமானது சென்ற மார்ச் 24ஆம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் அப்போது ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரிலீஸாக இருந்ததால் டான் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார்கள். இதைத்தொடர்ந்து இத்திரைப்படம் வருகின்ற மே 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் இந்த தேதியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. காரணம் என்னவென்றால் மே 20ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரிலீஸாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. டான் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தயாரிக்கின்றது. இத்திரைப்படம் ரிலீஸ் ஆகிய ஒரே வாரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படம் வெளியானால் வசூல் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு டான் திரைப்படம் மே 5ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல் வந்துள்ளது. ஆனால் இதுகுறித்து படக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை குறிப்பிடத்தக்கது.