விஜய் மீண்டும் தனது மாஸ்டர் படப்த்தின்படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
பிகில் படத்தின் வருவாய் தொடர்பாக வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதல் AGS நிறுவனம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் , பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். நடிகர் விஜய் இந்த படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் போன்ற விவரங்களை பெற்ற வருமானவரித்துறையினர் விஜய் மற்றும் அவரின் மனைவி சங்கீதாவிடம் வாங்குமூலம் பெற்றனர்.
தமிழ் திரையுலகை உலுக்கிய இந்த சோதனையில் அன்புசெழியன் மாற்றும் AGS நிறுவனத்தில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. நடிகர் விஜய் வீட்டில் 23 மணி நேரம் நடைபெற்ற சோதனை நேற்று இரவு முடிந்தநிலையில் இன்று விஜய் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றார். வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதால் நேற்று முன்தினம் படப்பிடிப்பு ரத்தானத நிலையில் தற்போது விஜய் படப்பிப்பில் கலந்துள்ளார்.