தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தினமும் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் மின்சாரம் 1,050 மெகாவாட் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் மொத்தமுள்ள 5 யூனிட்டுகளில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஒன்றில் மட்டுமே மின்சாரம் 210 மெகாவாட் உற்பத்தியாகிறது. ஆனால் மற்ற யூனிட்டுகளில் தற்போது மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்யாத காரணத்தினால் தான் தூத்துக்குடி அனல் மின்நிலையம் முடங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சுமார் 4,000 டன் நிலக்கரி இன்று தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. இதனால் மீண்டும் தற்போது மின் உற்பத்தி அனைத்து யூனிட்டுகளிலும் தொடங்கியுள்ளது.