திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரானா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது.
கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 125 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிற்கு இதுவரை சிகிச்சை பெற்றவர்களில் 11 ஆயிரத்து 659 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.