Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீண்டும் மிரட்டி வருகிறது… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உட்பட 50 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உட்பட 50 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, கோட்டையூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 126 பேர் சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். இவர்களில் 20 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |