Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மீண்டும் மிரட்டும் கொரோனா… 2-வது நாளாக உறுதி செய்யப்பட்டவை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் நேற்று முன்தினம் 2-வது நாளாக புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரானா பரவி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் மொத்தம் 2,309 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றால் ஏற்கனவே 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,281 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 7 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |