நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 78 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று பரவல் ஒரு சில இடங்களில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 78 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 925 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 102 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 9,604 பேர் இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றிற்கு தற்போது 1,165 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.