Categories
மாநில செய்திகள்

மீண்டும் மிரட்டும் தக்காளி…! எகிறிய விலை ஏற்றம்…. புலம்பும் இல்லத்தரசிகள்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால் கடந்த வாரங்களில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு சற்று மழை குறைந்த நிலையில், தக்காளி விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. அதன்படி ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து 60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 15 ரூபாய் உயர்ந்து 75 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

Categories

Tech |