கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது
. இதனை குறிப்பிட்டு மத்திய அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுமாறும், கொரோனா உறுதியானவர்களின் மரபணுவை சோதனைக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.