உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக நடத்தப்பட்ட ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. இந்த நிலையில் ஐ.நா பொதுச் சபையில் இந்த பிரச்சனை குறித்து சிறப்பு அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் உக்ரைன் ரஷ்யா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த மோதலில் ரஷ்யா மீது உக்ரைன் தூதர் செர்ஜிய் கிஸ்லிட்சியா குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “இந்த பிரச்சனையில் உக்ரைன் தப்ப வில்லை என்றால் ஐ.நாவும் தப்பாது. மேலும் ஜ.நா இந்த பிரச்சனையில் தோல்வியடைந்தாலும் ஆச்சரியம் இல்லை” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் ரஷ்ய தூதர் வாசிலி நபென்சியா கூறியதாவது. “உக்ரைன் தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணம். மேலும் பல ஆண்டுகாலமாக உக்ரைன் மின்ஸ்க் ஒப்பந்தத்தின் கீழ் நேரடி கடமைகளை மீறி வருகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையால் ஐ.நா சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.