Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும்!.. மீண்டும்!… சிக்கிய பிரபல நடிகை…. பண மோசடி வழக்கு…. நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு….!!!!!

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மீது மீண்டும் பண மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது. 

ஷில்பா ஷெட்டி இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டு பாஜிகர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பிர் மிலங்கெ, பர்தேசி பாபு போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களிலும்  நடித்து பிரபலமானார். ஷில்பா ஷெட்டியின் தந்தை பர்ஹத் அம்ரா கடந்த 2015 ஆம் ஆண்டு ரூ.21 லச்சம் கடன் வாங்கியிருந்த அவர் 2017 ஆம் ஆண்டு கொடுப்பதாக தெரிவித்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார்.

அந்தக் கடனை  வழங்கியவர் அவரின் குடும்பத்தினரிடம் திருப்பி கேட்டுள்ளார். அவர்கள் எந்த பதிலும் அளிக்காததால் மும்பை போலீஸ் நிலையத்தில் ஷில்பா ஷெட்டி அவர் தாயார் சுனந்தா மற்றும் சகோதரி சமிந்தா ஷெட்டி ஆகியோர் மீது  வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் குடும்பத்தினரை வரும் 28ஆம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். ஏற்கனவே உத்திரபிரதேசத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி மீது பண மோசடி வழக்கு இருக்கிறது.மேலும் ஷில்பா ஷெட்டியின் கணவர் மீதும் ஆபாச வீடியோ தயாரித்து மொபைல் மூலம் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Categories

Tech |