அதிமுக கொடியை பயன்படுத்தி சசிகலா தமிழ்நாடு வரக்கூடாது என்று அமைச்சர் சிவி சண்முகம், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் டிஜிபியிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.
அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்றும், ஏற்கனவே பயன்படுத்தியதற்ககு எதிர்ப்பு தெரிவித்தும் டிஜிபியிடம் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் தலைமையில் புகார் அளித்திருந்தார்கள். இந்தநிலையில் தற்போது, அதிமுக கொடியை பயன்படுத்தி சசிகலா உள்ளே வரக்கூடாது என்றும், தமிழகத்திற்கு வரக்கூடிய சசிகலா அதிமுக கொடியை எங்கும் பயன்படுத்த கூடாது என்றும் மீண்டும் டிஜிபியிடம் புகார் அளித்துளர்கள்.
இந்த புகாரை அளிப்பதற்காக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, மாபா பாண்டியராஜன் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் டிஜிபியை சந்தித்து இந்த புகாரை அளித்திருக்கிறார்கள். ஏற்கனவே ஒரு புகார் மனுவை கடந்த சில தினங்களுக்கு முன்பாக அளித்த நிலையில் மீண்டும் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில், சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத காரணத்தால் அவர் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிமுக கோடியை அவர் பயன்படுத்தியதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் வலியுறுத்தப்பட்டது. வருகின்ற 8ஆம் தேதி சசிகலா தமிழகம் வர இருக்கும் சூழ்நிலையில் அந்த கொடியை பயன்படுத்த கூடாது என்று அமைச்சர்கள் மீண்டும் புகார் அளித்துள்ளது அமமுக நிர்வாகிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.