பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவுவதை தடுப்பதற்காக விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருகின்றது. இதனால் அங்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் அந்நாட்டில் ஒரு நாளில் மட்டும் 29,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றானது கடந்த வாரத்தை விட 4.5 % அதிகம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனால் அந்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டதில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தியதன் காரணமாக அதற்கு தற்காலிக தடைவிதித்துள்ள பிரான்ஸ், இதனால் ஆபத்து இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் மீண்டும் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.