தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் சமந்தா அண்மையில் மயோ சிடிஸ் எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சமந்தா இந்த செய்தியை அறிவித்தார். தொடர்ந்து சமந்தாவை அவரின் மாஜி கணவர் நாக சைதன்யா மருத்துவமனைக்கு சென்று பார்த்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நோயிலிருந்து மீண்டு வந்துள்ள சமந்தா தன்னுடைய புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.அவருடைய ரசிகர்கள் சமந்தா மீண்டு வந்து விட்டார் என பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.இந்நிலையில் வழக்கம் போல இல்லாமல் சமந்தா சற்று வித்தியாசமான முகத்துடன் இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் மீண்டும் முகத்தில் சர்ஜரி செய்து கொண்டார் நடிகை சமந்தா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது. ஏற்கனவே சமந்தா நடிக்க தொடங்கிய காலத்தில் முகத்தில் சர்ஜரி செய்து கொண்டார் என பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் முகத்தில் சர்ஜரி செய்து கொண்டதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது.