பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தீவிரம் மீண்டும் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐரோப்பாவில் ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் சிலர் இருந்த நிலையில் இதனை உடைக்கும் வகையில் கொரோனா தீவிரம் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, ஸ்காட்லாந்தில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்துவது தொடர்பில் தனக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் கடந்த கோடை காலத்தை ஒப்பிடுகையில் தற்போது கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் சாதாரண நிலைக்கு நாம் மீண்டும் திரும்புவது தற்போதைக்கு சாத்தியமில்லாதது என்று தெரிவித்துள்ளார். பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டிருப்பதால் மேலும் ஆபத்து நமக்கு இருக்கிறது என்றும் கூறியுள்ளார். மக்களில் பெரும்பாலான தொழில் துறையினரும் கவனமுடன் முன்னேறி செல்வதைத்தான் விரும்புகிறோம். மாறாக பின்னடைவு ஏற்படுவதை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.