தன் முன்னால் காதலி விஷயத்தில் சிம்பு எடுத்திருக்கும் முடிவு பலரையும் வியக்க வைத்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் வசூல் வேட்டை நடத்தி வருவதை பார்த்து, படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில்தான் சிம்புவின் புது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நந்தா பெரியசாமி இயக்கும் படத்தில் சிம்புவும் அவரின் முன்னால் காதலியான ஹன்சிகாவும், சேர்ந்து நடிக்கவிருக்கிறார்களாம். சிம்புவும் காதல் முறிவுக்கு பிறகு ஹன்சிகாவுடன் நட்பாக பழகி வருகிறார். இந்த நிலையில் தான் ஹன்சிகாவின் 50-வது படமான மஹாவில் அவருக்கு காதலராக நடித்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் ஹன்சிகாவுடன் சேர்ந்து நடிக்கவிருகிறார் சிம்பு. அவரின் இந்த முடிவு குறித்து அறிந்த பலரும் வியக்கிறார்கள். முன்னால் காதலியை தோழியாக பார்க்கும் சிம்புவின் மெச்சூரிட்டி வேற லெவல் என்கிறார்கள் ரசிகர்கள். ஹன்சிகா மட்டுமல்ல தன் மற்றொரு முன்னால் காதலியான நயன்தாராவுடன் சேர்ந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்தார் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது.