Categories
உலக செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கா…? முக்கிய தகவலை வெளியிட்ட… நியூசிலாந்து பிரதமர்…!!

நியூசிலாந்தில் ஊரடங்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். 

நியூசிலாந்தில் உள்ள மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் மூன்று நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனாவானது பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற கொரோனா என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து முழு ஊரடங்கு ஆக்லாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் ஜெசிந்தா இந்த ஊரடங்கு அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு விதிமுறைகளின்படி அத்தியாவசிய பணிகள் மற்றும் பொருட்களை வாங்குவதை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக மக்கள் வீட்டிலிருந்து வெளியேற அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளதாவது, நியூசிலாந்தில்  கொரோனாவை கட்டுப்படுத்த முன்பு மேற்கொண்டிருந்த முயற்சிகளை தான் மீண்டும் தீவிரப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கிடையில் வீட்டிலிருந்தே பணியை மேற்கொள்ளுமாறு பணியாளர்களை தொழில்நிறுவனங்கள் கேட்டுள்ளனர். மாணவர்கள் பள்ளி செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் எட்டு இடங்களில் பிராந்திய எல்லைகளில், ஒரே நாள் இரவில் சோதனைகளைச் சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அத்தியாவசியமா காரணங்கள் தவிர்த்து பிற பயணங்கள் மேற்கொள்கிறார்களா? என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த சோதனை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |