Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு அமல்… அமைச்சரவை கூட்டத்தில் முடிவு…?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் அடுத்த பத்து நாட்களுக்குள்  கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என்றால் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலை குறித்து அமைச்சர் அஸ்லம் ஷேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மும்பையில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவர பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்னும் 10 நாட்களுக்குள் கட்டுக்குள் வரவில்லை என்றால் மும்பையில் ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தாராவியில் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. புதிதாக 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |