Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில் தேவைப்பட்டால் மக்கள் கூடும் இடங்களில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |