மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன.
அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவது குறித்து சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஏற்கனவே நாசிக் மற்றும் மலேகான் உள்ளிட்ட இடங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல் படுத்த ஆலோசனை செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.