Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு….? கடும் எச்சரிக்கைவிடுத்த ஆளுநர் தமிழிசை…!!

“கொரோனா கட்டுபாடுகளை மீறினால் முழு ஊரடங்கு விதிக்கப்படும்” என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்றுவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,” மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக மட்டும் தான் அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை காரணமாக வைத்து அவசியமின்றி பொதுமக்கள் சாலைக்கு வர வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும் “கொரோனா கட்டுபாடுகளை மீறினால் முழு ஊரடங்கு விதிக்கப்படும்” என்றும் தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை விடுத்தார்.

Categories

Tech |