நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்த வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்படுத்த மாநில அரசுகள் உள்ளூர் ரீதியில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஹோலி, ஈஸ்டர் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் வருவதால் மாநில அரசுகள் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.