நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஜூலை 4-ஆம் தேதியே கொரோனா மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக ஐதராபாத்து பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பிரபல இயற்பியலாளருமான விபின் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். பிப்ரவரி முதல் வாரத்தில் இரண்டாவது அலை தொடங்கி இரண்டு மாதங்களுக்குப் பிறகு உச்சத்தை அடைந்தது போல தற்போது மூன்றாவது அலை 2 மாதத்தில் உச்சம் எட்டும். மீண்டும் முழு ஊரடங்கு கூட வர வாய்ப்புள்ளது என அவர் கூறியுள்ளார்.