Categories
தேசிய செய்திகள்

மீண்டும் “மெடிக்ளைம்”…. தயாராக இருக்கும் எல்.ஐ.சி நிறுவனம்…. வெளியான தகவல்….!!!!

எல்ஐசி நிறுவனம் மீண்டும் “மெடிக்ளைம்” பிரிவில் நுழைவதற்கு தயாராக உள்ளதாகவும், கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அதன் தலைவர் எம்.ஆர்.குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “காப்பீட்டு நிறுவனங்கள் மீண்டும் மெடிக்ளைம் பாலிசிகள் வழங்குவது பற்றி இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ. சமீபத்தில் தெரிவித்துள்ளது குறித்து ஆலோசித்து வருகிறோம். நாங்கள் முன்பே மெடிக்ளைம் பிரிவில் இயங்கி வந்துள்ளோம். அது தொடர்பான அனுபவம் எங்களுக்கு இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

உடல் நலக் காப்பீட்டில் இழப்பீடுகளை வழங்கும் அடிப்படையிலான மெடிக்கிளைம் பாலிசிகள்தான், மிக அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் சென்ற 2016-ல் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம் மெடிக்ளைம் திட்டங்களை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு ஐ.ஆர்.டி.ஏ.ஐ., கேட்டுக்கொண்டது. சமீபத்தில் அனைத்து குடிமக்களுக்கும் வருகிற 2030-ஆம் வருடத்திற்குள் மெடிக்ளைம் பாலிசி வழங்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியது.

அதனை தொடர்ந்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் மெடிக்ளைம் பிரிவில் மீண்டுமாக செயல்படுவதற்கான நேரம் வந்திருப்பதாக ஐ.ஆர்.டி.ஏ.ஐ. தலைவர் தேபஷிஷ் பாண்டா தெரிவித்துள்ளார். எனினும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், மெடிக்ளைம் பிரிவில் மீண்டுமாக செயல்படுவது பற்றி இறுதி முடிவுகள் எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் இப்போது 24.50 லட்சம் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் இருக்கின்றனர். ஆனால் பொதுகாப்பீட்டில், 3.60 லட்சம் முகவர்கள் மட்டுமே இருக்கின்றனர். இந்த நிலையில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், உடல்நல காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும்பட்சத்தில் அரசு அதன் இலக்கை எளிதாக அடையமுடியும் என்று கருதப்படுகிறது.

Categories

Tech |