Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ரஜினியுடன் கூட்டணி அமைக்கும் சிவா… வெளியான மாஸ் தகவல்…!!!

மீண்டும் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இவர் இதற்கு முன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இதன்பின் இவர் நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய நான்கு சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். மேலும் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படம் தீபாவளியன்று தியேட்டர்களில் ரிலீஸாகி வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது.

Rajinikanth back on 'Annaatthe' sets, picture with director Siva shared  online | The News Minute

இதை தொடர்ந்து இயக்குனர் சிவா நடிகர் சூர்யா படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் சிவா மீண்டும் ரஜினியுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |