5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வருகின்ற 27 ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஓய்வூதியத் திட்டத்தில் திருத்தங்கள்,தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜூன் 27ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு உள்ளிட்ட 9 வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் போரம் ஆஃப் வங்கி யூனியன் ஆகிய சங்கங்கள் பங்கேற்க உள்ளது. இதில் சுமார் 7 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதால் இதனால் வருகின்ற 27 ஆம் தேதி வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.