யமஹா ஆர்.எக்ஸ் 100 பைக்கிற்கு எப்போதுமே மவுசு உண்டு. ஆனால் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட ஆர்.எக்ஸ் 100 பைக் யமஹா 2 ஸ்ட்ரோக் இஞ்சினை கொண்டிருந்ததால் பி.எஸ் 3 சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கவில்லை. இதனால் பி.எஸ் 3 விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய ஆர்.எக்ஸ் 100 மோட்டார் சைக்கிள் தயாரிக்கப்பட உள்ளது.
பழைய ஆர்.எக்ஸ் 100 மாடலுக்கு ஈடு செய்யும் விதத்தில் இந்த பைக் தயாரிக்கப்படும் என யமஹா நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். நொய்டா மற்றும் சென்னை தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் இந்த பைக் 2026 ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.