இந்தியாவில் மீண்டும் டிக் டாக் செயலி செயல்பட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவில் சீன செயலியான டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி இந்திய அரசு தடை செய்துள்ள டிக் டாக் செயலி மீண்டும் இந்தியாவில் செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், இந்திய நிறுவனமான கிளான்ஸ் உடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முயற்சி வெற்றி பெற்றால் டிக் டாக் செயல்பாட்டை கிளான்ஸ் நிறுவனத்துக்கு பை டான்ஸ் விட்டுவிடும். ஆனால் பயனாளர் தகவல்கள் இந்திய எல்லைக்குள் இருந்தால் மட்டுமே அரசு இதற்கு அனுமதி அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.