நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான லைகர் படத்தை நடிகை சார்மி மற்றும் பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்துள்ளார் . இவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன். மை டைசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். பான் இந்தியா படமாக அண்மையில் வெளியான இந்த திரைப்படம் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்று வந்தது.
முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களோ தியேட்டரில் உட்காரவே முடியவில்லை என்று கூறி கலாய்த்து தள்ளி இருந்தனர். இந்நிலையில் இந்த படம் தோல்வி அடைந்ததால் அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகை சார்மி ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளார். ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது “சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளேன். பூரி கனெக்டஸ் வலுவாக மீண்டும் வரும்” என்று குறிப்பிட்டுள்ளார். லைகர் திரைப்படம் தொடர்ந்து மோசமான விமர்சனங்களை சந்தித்ததால் தயாரிப்பு நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் இந்த முடிவை சார்மி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.