Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வாக்கு எண்ண கோரிக்கை…. புதிய பரபரப்பு….!!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதி வாக்குகளை மீண்டும் என்ன வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நந்திகிராமில் போட்டியிட்டு வெற்றி அடைந்தாக அறிவிக்கப்பட்ட மம்தா, மீண்டும் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து நந்திகிராம் தொகுதியில் வாக்குச்சாவடி எண் 210-இல் பதிவான வாக்குகள், தபால் வாக்குகளை மீண்டும் உடனடியாக என்ன வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |