சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பல குடும்பங்கள் விறகு அடுப்பைப் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தீபாவளிக்கு முன்னதாக அதாவது நவம்பர் 1ஆம் தேதி சிலிண்டர் விலை ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் தான் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருந்தது. சிலிண்டர் விலை தொடர்ச்சியாக பல மாதங்கள் உயர்ந்து கொண்டே வருவதால் மேற்கு வங்கத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் 42 சதவீத கிராம மக்கள் தங்கள் சமையல் எரிவாயு இணைப்புகளை பயன்படுத்தாமல் அடுப்புகளை பயன்படுத்த தொடங்கி இருப்பதாக இந்தி மொழியில் வெளியான ஒரு செய்தி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது தொடர்பான கட்டுரையை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்த ராகுல்காந்தி பல லட்சம் மக்கள் விரகு அடுப்பு பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.