Categories
டெக்னாலஜி

மீண்டும் விலையை உயர்த்திய ராயல் என்ஃபீல்ட்… எவ்வளவு தெரியுமா..?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார் சைக்கிளின் விலையை இரண்டாவது முறையாக விலை உயர்த்தி உள்ளது.

ராயல் என்ஃபீல்ட் அனைத்து இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்தமான பைக் வகைகளில் ஒன்று. இந்த வகை பைக்குகளுக்கு தனி மவுசு உள்ளது. இதனை வாங்குவதற்கு இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இதன் விலையும் அதேபோல் மிக உயர்ந்து கொண்டே வருகின்றது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிளின் விலை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் உயர்த்தியுள்ளது.

அதன்படி 350 சிசி உள்ளிட்ட பல மாடல்களின் விலை ஏப்ரல் மாதம் முதல் ரூபாய் 7000 முதல் ரூபாய் 13,000 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கிளாசிக் 350 சிசி விலை ரூபாய் 10 ஆயிரமும், மெடியோர் 150சிசி விலை ரூபாய் 6000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரியில் ராயல் என்ஃபீல்டு மாடல்களின் விலை 3000 வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வு ராயல் என்ஃபீல்டு பைக் பிரியர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |